- There are two varities of onions- Big onion and shallots.
- It helps in blood thinning.
- If the smokers take 3-4 shallots after their dinner, there is a chance of reducing the poison caused by the cigarettes.
- Many products like onion flakes, onion powder are made and exported. Onion salt are included in the food by many foreigners.
- They help in reducing hairfall and greying of hair in young age.
- They gives us strength and helps in digestion. There is a phrase in tamil- oru kaayam mattum thaan unavil saerka vendum. Perungayam(asafoetida) or Vangayam(onion).
- It is widely used in Ayurvedic medicine. They reduces body heat, good medicine for cold and cough, keep the bile secretion under control, for bone strength and other benefits.
- Chop the onion, fry it in ghee, mix it with ghee and eat. It will delay the ageing process.
- It is good during convalescence period, improves haemoglobin level and prevents heart attack.
- If we take 2 or 3 shallots while we are thirsty, it will quench our thirst.
- Spring onions have more health benefits than onions.
- If people with high blood pressure take 10 ahallots in the morning, their blood pressure will come under control.
- When it was the time people died due to plague, there was no death in the house of onion and garlic merchants. Its flavour will not allow the deadly disease to enter the house. Also it keeps away the snakes, scorpions.
- Apart from these, it helps in reducing body weight, good medicine for jaundice, mouth ulcer, kidney stones etc.,
நம் அன்றாட உணவில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காயம் சிறுவெங்காயம் அல்லது நாட்டு வெங்காயம் என்று ஒரு வகையாகவும், பெரிய வெங்காயம் அல்லது பெல்லாரி வெங்காயம் என்று காரம் குறைவாக கொண்ட இன்னொரு வகையாகவும் உள்ளது.
சைவ உணவில் மட்டுமல்ல… அசைவ உணவிலும் நல்ல பலன் தரும் வெங்காயம், நமது நரம்புகளில் ரத்தம் கட்டியாக உறைவதைத் தடுக்கிறது. தினசரி இரவு உணவுக்குப் பிறகு மூன்று, நான்கு சிறு வெங்காயத்தைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் புகை பிடிப்பவர்கள் ஓரளவு விஷம் இறங்குவதைத் தடுக்க வழி உள்ளது.
பெரிய வெங்காயத்தை சிறப்பான தனி இயந் திரத்தில் காய வைத்து, ஆனியன் பிளேக்ஸ், ஆனியன் பவுடர் போன்ற ஏற்றுமதிக்கு உகந்த பொருள்களை தயார் செய்கின்றனர். பெரிய வெங்காயப் பவுடரில் இருந்து வெங்காய உப்பு தயாரிக்கலாம். இது மேல்நாடுகளில் உணவுகளில் நன்கு பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயத்தை உணவோடு உண்டால் நல்ல ஆரோக்கியம் பெருகும். உணவின் சுவை கூட்டி ஜீரணம் ஆகும். தலைமுடி கொட்டுவதை தடுத்து வழுக்கை விழாது தடுக்கும். வெங்காயம் நரை ஏற்படுத்துவதை தள்ளிப் போடவும் உதவும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயம் வீரிய சக்திகளையும், வெப்பத்தையும் மிதமாகத் தூண்டும், வாத உபாதைகளைப் போக்க வல்லது. கபத்தை வளர்ப்பது, வலுவூட்டுவது பித்தத்தை தூண்டுவது மற்றும் அக்னி மந்தத்தைப் போக்குவது என பல நன்மைகள் வெங்காயத்தால் கிடைக்கிறது.
ரத்த விருத்தி தரும் வெங்காயம், எலும்புகளுக்கும் நல்ல வன்மையைத் தரும். குஷ்டம், குன்மம், மேகநீர் வியாதி, வாதரோகம், வலிப்பு நோய், மூலநோய், ஜலதோஷம் தொற்று நோய் இவற்றை எல்லாம் சமனப்படுத்தும் வெங்காயம், உலகெங்கும் பயிரிடப்பட்டு உலக மக்கள் அனைவராலும் உண்ணப்படுகிறது.
வெங்காயத்தை நீண்ட நாள் இருப்பில் வைத்திட வினிகரில் (ஜாடியில்) ஊற வைப்பது வழக்கம். புரதம் வெங்காயத்தில் இல்லை. இருப்பினும் இதில் காரம், ஜீவ சத்து உண்டு. சற்று இனிப்பு சுவையும் உண்டு. மசாலாவுக்கு ஏற்ற வாசனை அதிகம்.
இளமையுடன் வாழ நறுக்கிய வெங்காயத்தை நெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து திடமான சரீரம் பெறலாம். இழந்த சக்தியை மீட்க உதவும் வெங்காயம் உறைந்த ரத்தத்தை கரைத்து விடுவதாலும், இருதயத்தின் சுற்றுச் சுவர்களை நன்கு வலிமையடையச் செய்வதாலும் இதய நோய் வராது காக்கிறது.
தாகம் எடுக்கும் பொழுதெல்லாம் இரண்டு, மூன்று வெங்காயத்தை உண்டால் பாலைவனத்தில் கூட தண்ணீர் தட்டுப்பாட்டில் பாதிப்பின்றி தப்பலாம். பித்தம் அதிகமாகி வாய்க் கசக்கும் தருணம், தோலை உரித்து வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் பித்தம் சரியாகி விடும்.
வெங்காயப் பூவில் கூட இதன் சத்துக்கள் அபரிதமாக உள்ளது. வெங்காயத் தழையும் சத்துள்ளதாக, கோழிகளுக்குக் கூட நல்ல தீனியாக உள்ளது. நல்ல பெரிய முட்டை பெற உதவும் வெங்காயத்தழையை உண்ட கோழியின் முட்டை மஞ்சள் கரு சிதையாமலும் கெட்டியாக இருக்கும்.
பழுப்பு தங்க நிறச்சாயம் செய்யும் தொழிலுக்கு வெங்காயத் தோல் நன்றாகப் பயன்படுகிறது.
சிறுகுடலின், ஜீரண உபாதை உள்ளவர்களுக்கும் வெங்காயம் கை கண்ட மருந்தாகும். இருமினாலும், ஜலதோஷமானாலும் வேக வைத்த வெங்காயத்தின் சாற்றை ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சரியாகி விடும்.
வெங்காயத்தின் முழுப் பயனை அடைய வேண்டுமென்றால் பச்சையாக சாப்பிட வேண்டும். பச்சை வெங்காயத்துக்கு நல்ல தூக்கத்தையளிக்கும் தன்மை உண்டு.
“பிளேக்’ நோயினால் மக்கள் மாண்டு கொண்டிருந்த பொழுது வெங்காய, வெள்ளைப் பூண்டு வியாபாரிகள் வீட்டில் ஒருவரும் இறக்காமல் இருந்ததை கண்டு, வியப்படைந்த வரலாறும் உண்டு.
படுக்கை அறையில் வெங்காயத்தை நறுக்கி வைத்து விட்டால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் உள்ளே நுழையாத அளவிற்கு வெங்காய நெடி சிறந்த விரட்டியாக பயன்படுகிறது.
ரத்த அழுத்தம் உடையவர்கள் தினசரி காலையும், மாலையும் பத்து சிறு வெங்காயங்களை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகி விடுகிறது. வெங்காய லேகியம் மேக நோயிலிருந்து விடுவிக்கும். இதற்கு வெள்ளை வெங்காயம் சிறந்தது.
சதை போட்டு பெரிய மலை போல உள்ளவர்களை சரியாக்கும் அற்புதம் கொண்டது வெங்காயம். இதற்கு காரணம் வெங்காயத்தில் கொழுப்புச் சத்து கிடையாது.
வெங்காயத்தை பயன்படுத்தி மருந்து தயாரித்து தொண்டைப்புண், வாய்ப்புண், மாந்தம், மகோதரம் சீறுநீரக கல் முதலிய உபாதைகளைப் போக்கலாம்.
வெங்காயச் சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சீத பேதி சரியாகும். குல்கந்துடன் கூட இதனை உண்ணலாம். தாது புஷ்டி ஏற்பட வெங்காய விதைகளை தேன் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
கீல் வாயுவினால் மூட்டு வீங்கி வலி வந்தால் வெங்காயம் உதவும். காமாலை நோய் போக்கவும், கண்பார்வை மங்கல் போக்கவும் உதவும் வெங்காயம், காலை பலகாரத்துக்கு தேங்காய் சட்னியை விட வெங்காயச் சட்னி பயன்படுத்தலாம்.
டியர் அம்மூஸ்… இனி போடா வெங்காயம் என்று யாரையும் சொல்ல மாட்டீங்கள் தானே. தினமும் சாப்பிடணும் சரியா..!
டாக்டர். பா. இளங்கோவன்